டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகள் புயிஐ பரிவர்த்தனையை எளிதாக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகுதான், அதில் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.
கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ள நிலையில் ஆகஸ்டு முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படு கிறது.

பிரதமர் மோடியால் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 1 அன்று டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, நாட்டை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும். இந்த பண பரிவர்த்தனை முறை அமல்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். தற்போதைய மாலத்தீவு பயணத்தின்போதும் இரு நாடுகளுக்கு யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அமல்படுத்தியது. அதன்படி, ரொக்கத்திற்கு மாற்றாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையுல், யுபிஐ பண பரிமாற்ற முறையை கொண்டு வந்தது. இதன காரணமாக, , தற்போது சாதாரண பிச்சைக்காரர்கள், பெட்டிக்கடை முதல் பிரமாண்ட ஷோரூம் வரை யுபிஐ பிரலமாகி உள்ளது.
இதன் காரணமாக யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை நாள் ஒன்றுக்கு பண பரிமாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.. இதைத் தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் UPI மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் இதுவரை இல்லாத அளவுக்கு 18.68 பில்லியன் டாலர்களாகவும், ₹25.14 டிரில்லியன் மதிப்புடையதாகவும் உயர்ந்துள்ளதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.
மேலும், யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் கோடி ரூபா அளவுக்குப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாகவும், ஆண்டுதோறும் இது 32 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. .
இந்தியாவில், டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவிகிதம் யுபிஐ கணக்குகள் மூலமே நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், யுபிஐ முறையை மேலும் எளிதாக்கவும், பாதுகாப்பு, நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் ஆகஸ்ட் 1ந்தேதேதி முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி உங்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்க ஒரே நாளில் 25 முறை மட்டுமே, UPI செயலிகள் அனுமதிக்கப்படும். இது யுபிஐ பரிவர்த்தனைகளை இலகுவாக்க உதவும்.
PhonePe, Google Pay, Paytm போன்ற UPI செயலிகளில், ஒரே நாளில் 50 முறை வரை மட்டுமே கணக்கு இருப்பை பார்வையிட முடியும்.
பல யுபிஐ ஆப்களில் அடிக்கடி balance check request அனுப்பப்படுவதால், பணப் பரிமாற்றங்களில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க இது உதவும்.
Auto-Debit பணப்பரிவர்த்தனைக்கு புதிய நேர வரம்புகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி EMI, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஓடிடி சந்தாக்கள், காப்பீடு கட்டணம் போன்றவை காலை 10 மணிக்கு முன்னதாகவும், பிற்பகல் 1 முதல் 5 மணி வரையிலும், இரவு 9.30 மணிக்கு பிறகும் அனுமதிக்கப்படும். இது தடையற்ற சேவைக்கு வழிவகுக்கும்.
யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் transaction நிலையை 90 வினாடிகள் இடைவெளியில் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இது transaction retry மற்றும் refund செயல்பாடுகள் சீராக நடைபெற உதவும்
யுபிஐ மூலம் பணம் அனுப்பும் நேரம் 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தவறான பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கும் நேரம் 10 வினாடிகளுக்கு மட்டுமே இருக்குமாறு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் அனைத்தும் செயலியில் தானாகவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
நாளுக்கு நாள் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பரிவர்த்தனையை எளிதாக்க, தங்கு தடையின்றி சேவைகளை வழங்க புதிய விதிகள் பயன்படும் என்று எதிர்பார்க்கலாம்.
