டெல்லி: பொதுமக்கள் உபயோகப்படுத்தும் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, பணவரம்பு தொடர்பான விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது,.
மக்கள் இப்போது புதிய சேவைகளை தேர்வு செய்வது, அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்ட வற்றுக்கும் பதிவு செய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் இனி 24 மணி நேரமும் பரிவர்த்தனை வரம்புகளையும் மாற்ற முடியும்.
மொபைல் செயலிகள் , இணையவழி வங்கி சேவை, ஏடிஎம் இயந்திரம், ஐவிஆர் கால் சேவைகளில் மூலம் பரிவர்த்தனை வரம்புகளை மாற்றிக்கொள்ளலாம்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்தாத கார்டுகளை தடை செய்யுமாறு அனைத்து வங்கிகளையும் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
டெபிட் மற்றும் கிரெடிட் இரண்டு கார்டுகளையும் வைத்திருப்பவர்களுக்கு தங்களின் வரம்பை அமைக்க இந்த புதிய வசதி உதவும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.