மதுரை:
துரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.

இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் உள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசிகள், திரையரங்குகள், திருமண நிகழ்ச்சி, மார்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மீறி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்வதற்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.