சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனாண்டாள் முரளி அணியினர் வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்துள்ளனர். அந்தத் தேர்தலில் முரளி அணிக்கு எதிராகக் களத்திலிருந்த டி.ராஜேந்தர் அணியினர், தற்போது புதிதாக ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு ‘தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த புதிய சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செயலாளர்களாக சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜே.எஸ்.கே சதிஷ், பொருளாளராக கே.ராஜன், துணை தலைவர்களாக பி.டி.செல்வகுமார் மற்றும் ஆர்.சிங்கார வடிவேலன், இணை செயலாளர்களாக கே.ஜி.பாண்டியன், எம்.அசோக் சாம்ராஜ் மற்றும் சிகரம் ஆர்.சந்திர சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.