டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்து வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், 2022ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,  2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பம் செய்யும்பணி ஏற்கனவே தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6ந்தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, மே 15ந்தேதி கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதன்படி,  மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

அதன்படி www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மே 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 15 இரவு 9 மணி வரை நீட் விண்ணப்பங்கள் பெறப்படும். அன்று இரவு 11.50 மணிவரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான நேரம் கூடுதலாக  20 நிமிடம் வழங்கி தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.  தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இ

ந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அசாமி, பெங்காலி, ஆங்கிலம். குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா,  தமிழ், தெலுங்கு பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.

விண்ணப்ப விவரங்கள், தோ்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தோ்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு என்டிஏ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.