சாகர்,

டமாநிலங்களில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பல லட்சம் பேர் திரண்டனர்.

தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது போல வட மாநிலங்களில் மகரசங்கராந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்குள்ள மக்கள் கங்கையில் புனித நீராடுவது வழக்கம்.

இந்நிலையில் மேற்குவங்காளத்தில் உள்ள கங்கா சாகர் பகுதியில்  கங்கை கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அந்த நரகமே நேற்று மக்கள் கூட்டத்தால் திணறியது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராட திரண்டதால் கங்கை நிதி பக்தர்களால் முற்றுகை யிடப்பட்டது போன்ற காட்சியே தென்பட்டது.

இந்த புனிதா நீராடலுக்கு இந்தியா மட்டுமின்றி நேபாளம், பூட்டான், வங்காளம் ஆகிய நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள்  கங்கையில் நீராடிவிட்டு,  அங்குள்ள கபில முனி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.