போர்ட் லூயிஸ்
நவீன் ராம்கூலம் மொரீயசியஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான் மொரிசியஸ் நாட்டில் நவம்பர்.10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளு அறிவிக்கப்பட்டது. கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.
முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான – பார்டி டிராவைலிஸ்ட்(பிடி’ஆர்’) மற்றும் மொரீஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இதையொட்டி நவீன் ராம்கூலம் மூன்றாவது முறையாக மொரீசியஸ் பிரதமராக பதவியேற்க உள்ளார்.