பாட்டியாலா: தேசிய தடகள 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் தனலட்சுமி.
தற்போது, பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில், 24வது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில், 22 வயதான தமிழ்நாட்டின் தனலட்சுமி, பந்தய தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதனால், தங்கம் கிடைத்தது.
அதேசமயம், முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிசாவின் டூட்டீ சந்த், பந்தய தூரத்தை 11.58 வினாடிகளில் கடந்து 2வது இடம்பிடித்து வெள்ளி வென்றார்.
அதேசமயம், ஆண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில், தமிழ்நாட்டின் இலக்கியதாசன் 2வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.