டெல்லி: ஆசியான் – இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை லாவோஸ் புறப்பட்டு சென்றார்.
ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடக்கிறது. ஆசியான் – இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. அதாவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான் – இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவராக லாவோஸ் உள்ளது.
இதன் காரணமாக, இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக 2 நாள் பயணமாக இன்று அவர் காலை தனி விமானம் மூலம் லாவோஸ் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மேற்படி 2 மாநாடுக ளிலும் பங்கேற்கிறார்.
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் இது பிரதமரின் பத்தாவது வருகை என்றும் அத்துடன் இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு செயலாளர் கூறியுள்ளார்.