ஆத்தூர்: சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா, அவரது துணிகள் என்னவானது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள ஆத்தூரில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இதில் ஆறுகள், சாக்கடைகள் கலக்கின்றன. அதுபோல அருகே உள்ள துலக்கனூர்பகுதியில் உள்ள கழிவு நீரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பேரிளம்பெண் ஒருவர் உடல் நிர்வாண நிலையில் மிதந்து வந்தது. இந்த பெண் அந்த பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், அதைக்கண்ட அந்த பகுதி மக்கள் பரபரப்பு அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தவவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வசிஷ்ட நதியில் மிதந்து கொண்டிருந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பெண்ணின் உடலில் துணி ஏதும் இல்லாததால், அவர் கொலை செய்து வீசப்பட்டிருக்கலாம் என்றும், பாலியல் துண்புறுத்தல் செய்து கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், இங்கு அவரது உடல் எப்படி வந்தது, அல்லது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்வதானால், உடலில் துணி இருந்திருக்க வேண்டுமே என பல கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருகே உள்ள ஊர்களிலும், காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.