கோஹிமா: நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் எதிரொலியாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. கொரோனா தொற்று கட்டுக்குள் வரவே மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அந்த வகையில் நாகாலாந்தில் மார்ச் 22 முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், மாணவர்கள் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.