மைசூர்:
மைசூர் மன்னர் குடும்பத்தின் பிறந்த இளவரசருக்கு அதியவீரா நரசிம்மராஜா உடையார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மைசூர் இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ உடையாருக்கும், ராஜஸ்தான் துங்கப்பூர் மன்னர் குடும்பத்து இளவரசி திரிஷிகா குமாரி தேவிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அலமேலம்மா என்பவர் இந்த மன்னர் குடும்பத்துக்கு முன்பு விட்ட சாபம் காரணமாக இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று மக்கள் கவலை கொண்டிருந்தனர்.
ஆனால், இளவரசி கர்ப்பமடைந்தார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 64 ஆண்டுகள் கழித்து யது வம்ச சிம்மாசனத்துக்கு வாரிசு பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா மைசூர் அரண்மனையில் நடந்தது. அப்போது குழந்தைக்கு அதியவீரா நரசிம்மராஜா உடையார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.