சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது பாரிஸ் ஜெயராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலை பாடுகிறார். இந்த பாடலின் ரெக்கார்டிங் புகைப்படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.