சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.

யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்.சி.எஸ். தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’சாணிக் காயிதம்’ படத்தில் இணைவது பெருமையின் உச்சம் என்றும் ’சாணிக் காயிதம் ’ படக்குழுவினர்களுடன் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.