சென்னை: கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை அணி.

அந்த அணியின் சூர்யகுமார் அதிகபட்சமாக 56 ரன்களை அடித்தார். கேப்டன் ரோகித் ஷர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த அணியில், வேறு யாரும் 20 ரன்களைக்கூட எட்டவில்லை. முக்கியமான இன்றைய ஆட்டத்தில், பொல்லார்டு எடுத்தது வெறும் 5 ரன்கள் மட்டுமே. ஹர்திக் மற்றும் கருணால் சகோதரர்கள் தலா 15 ரன்களை மட்டுமே அடித்தனர்.

கொல்கத்தா சார்பில், ஆண்ட்ரூ ரஸ்ஸல், வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீசி, 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இன்று அவரின் நாளாக அமைந்தது. பாட் கம்மின்ஸுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.