மும்பை:
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்ததில், 2 பெண்கள் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மேம்பாலத்தில் ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்த தகவல் வந்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடம் மீட்புப் படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் மும்பையின் அந்தேரி ரயில் நிலைய மேம்பாலத்தின் ஸ்லேப் இடிந்து ரயில் பாதையில் விழுந்ததில் 5 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Patrikai.com official YouTube Channel