ஒளரங்காபாத்: வியாபாரிகளால், விவசாயிகள் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை.

‍மேலும், இத்தகைய மோசடிகளை எதிர்த்து, விவசாயிகள் நீதிமன்றத்தை நாடும் வசதியைப் பெற்றிருக்காத காரணத்தால், வியாபாரிகள் அவர்களை ஏமாற்றுவது எளிதாகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய மோசடிகளால், மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ளது நீதிமன்றம்.

இதனடிப்படையில், மராட்டிய மாநிலத்தின் ஜலோகன் மாவட்டத்தைச் சேர்ந்த வாழை விவசாயிகளை ஏமாற்றியதாக, தங்கள் மீதுசுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரத்துசெய்ய வேண்டுமென 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்துவிட்டது உயர்நீதிமன்றம்.