மும்பை
மும்பை உயர்நீதிமன்றம் முன்னால் ஐ பி எல் தலைவர் லலித் மோடிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பிரபல தொழிலதிபரும் ஐ பி எல் கிரிக்கெட் முன்னாள் தலைவருமான லித் மோடி மீத் ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது லலித் மோடி வெளிநாட்டில் வசிட்து வருகிறார். இந்நிலையில் லலித் மோடிமும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
”அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (பெமா) 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறை தனக்கு விதித்த ரூ.10.65 கோடி அபராதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த உத்தரவிட வேண்டும். அமலாக்கத்துறை நடவடிக்கையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவராகவும், ஐ.பி.எல். தலைவராகவும் இருந்ததால் எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்கவேண்டும்”
எனக் கோரி இருந்தார்.
நேற்று இந்த மனுவை நீதிபதிகள் மகேஷ் சோனக், ஜித்தேந்திர ஜெயின் ஆகியோர் விசாரித்தபோது அவர்கள் லலித் மோடியின் மனு அற்பத்தமானது, முற்றிலும் தவறானது எனக்கூறி தள்ளுபடி செய்தனர். லலித் மோடுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன் அதை டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.