ஸ்லோகா மேத்தா                                                ஆகாஷ் அம்பானி

மும்பை

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, வைர வர்த்தகர் ரசல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி இவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி.    இவரும் பிரபல வைர வர்த்தகர் ரசல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள் ஆவார்கள்.   ரசல் மேத்தா ரோஸி புளூ என்னும் வைர வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் ஆவார்.

இந்நிலையில் ஆகாஷ் மற்றும் ஸ்லோகா ஆகிய இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.   மேலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் இரு குடும்பத்தினரும் இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

இந்நிலையில்  இந்த குடும்பங்களின் நெருங்கிய நண்பர் ஒருவர், “இதுவரை திருமண தேதி முடிவு செய்யப்படாததாலும்,  நிச்சயதார்த்தம் நடைபெறாததாலும் செய்தியை குடும்பத்தினர் வெளியிடவில்லை.  விரைவில் இந்த திருமணச் செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.