திருச்சூர்:
குருவாயூர் கோவிலுக்கு தொழிலதிபர் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை அளித்தார்.

கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியுடன் வந்திருந்த அவர், கோவில் அன்னதான நிதியாக 1.51 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்தார்.

இந்நிலையில், கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘கோவில் வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள மருத்துவமனைக்கு, அம்பானியிடம் உதவி கேட்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்’ என்று தெரிவித்தனர்.