மும்பை: பிரபல தொழிலதிபர் மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் (NCPA)  அவரது உடல் இன்று மாலை வரை வைக்கப்படும், அங்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்து உள்ளது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட  ரத்தன் டாடா காலமானார் நள்ளிரவு காலமானார்.  முன்தாக, பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்ததாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.

அவரது  உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று திரு ஷிண்டே அறிவித்தார். வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும்,   தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திரந்தார்.

இந்த நிலையில் மறைந்த   ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்குக்கு கொண்டு வரப்படும் ரத்தன் டாடாவின் உடலுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

டாடாவின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் (NCPA) வைக்கப்படும், அங்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம். பிற்பகலில் வொர்லி பகுதியில் தகனம் செய்யப்படும். ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி லாவோஸ் புறப்பட்டுச் சென்ற நிலையில், மறைந்த கோடீஸ்வர தொழிலதிபரின் இறுதிச் சடங்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார்.