போபால்:

மத்திய பிரதேச மாநிலம் பவாரா ராய்கர் மாவட்டத்தில் பஜ்ரங்தள் சார்பில் ஆயுத பயிற்சி முகாம் நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்து பாதுகாப்பு என்ற பெயரில் அந்த அமைப்பின் தொண்டர்களுக்கு இந்த ஆயுத பயிற்சி ரகிசயமாக அளிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை இநுத பயிற்சி நடந்துள்ளது. இதில் 32 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு துப்பாக்கி, கத்தி, வாள், லத்தி போன்றவற்றை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் தேச விரோதிகள் மற்றும் லவ் ஜிகாதிகளை கையாளும் நோக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல், கராத்தே, மரத்தில் கயிறு மூலம் ஏறுதல், உயரம் தாண்டுதல் போன்ற வித்தகைகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து இந்த விஷயம் வெளியில் தெரிந்துள்ளது.