பெங்களூர்

ற்கனவே அறிவித்தபடி இன்று கர்நாடகாவில் கடை அடைப்பு நடைபெறும் என பாஜக சார்பில் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் குமாரசாமி வாக்குறுதி கொடுத்திருந்தார்.   ஆனால் முதல்வரான பிறகு விவசாயக் கடன்களை தற்போதைக்கு தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என முதல்வர் கூறி உள்ளார்.   கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

குமாரசாமியை கண்டித்து இன்று கர்நாடகாவில் கடை அடைப்பு நடைபெறும் என அறிவித்திருந்தார்.   ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்த தேர்தல் இன்று நடைபெற உள்ளதால் கடையடைப்பு நடைபெறாது என தகவல்கள் வெளியாகின.  ஆனால் இதை எடியூரப்பா மறுத்துள்ளார்.

எடியூரப்பா, “கடையடைப்பு எற்கனவே அறிவித்தபடி நடைபெறும்.    தேர்தலின் போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக சொன்ன குமாரசாமி பதவிக்கு வந்ததும் மாறி விட்டார்.   இதனால் விவசாயிகளுடன் இணந்து பாஜகவினரும் போராட்டத்தில் இறங்கி உள்ளோம்.   தேர்தல் நடக்கும் ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியை தவிர்த்து மாநிலத்தில் மற்ற இடங்களில் எல்லாம் கடை அடைப்பு நடக்கும்” என தெரிவித்துள்ளார்.