டெல்லி

த்திய சுகாதாரத்துறை வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெர்வித்துள்ளது.

ஒரு அரிய வகை தொற்று நோய் ஆன குரங்கு அம்மை நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். மனிதர்களுக்கு இடையே இது எளிதில் பரவாது என்றாலு பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் எச்சரித்து அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை,

”தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர் குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்”

என்று தெரிவித்துள்ளது.