கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன..

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்

அந்த வகையில் தற்போது மலையாள நடிகர் மோகன்லால் தன் பங்கிற்கு கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

இது பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “இது மிகவும் கடினமான நேரம். கொரோனா வைரஸை சமாளிக்க நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் உங்கள் தலைமை பற்றி வரலாறு நிச்சயம் பேசும்.”

“முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நான் அனுப்பியுள்ள 50 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.