மோடி பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஜூன் 8ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 9 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக முன்வந்த நிலையில் தங்களுக்கு முக்கிய இலாக்காக்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான அமைச்சர் பதவி வேண்டும் என்று கூட்டணி கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூட்டணி கட்சியினர் தங்கள் கோரிக்கையை பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான பியூஸ் கோயல் உள்ளிட்டவர்களிடம் எழுப்பிய நிலையில் கூட்டணி கட்சிகளுடனான அடுத்தகட்ட ஆலோசனை நாளை நடைபெறுவதாகக் கூறப்பட்டது.
PM Narendra Modi's swearing-in ceremony may take place on 9th June at 6 pm. It was earlier scheduled for 8th June, official confirmation on the final date is awaited: Sources
(file photo) pic.twitter.com/nSWvxz9Ga4
— ANI (@ANI) June 6, 2024
இந்த நிலையில், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக எம்.பி.க்களின் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ள நிலையில் பிரதமராக மோடி பதவியேற்பு நிகழ்ச்சி ஜூன் 9 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.