புதாபி

ந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின.

இதில் குறிப்பாக இந்தியா-அமீரகம் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  பிரதமரின் இந்த சந்திப்பின் போது எரிபொருள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இருநாடுகள் சார்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் மோடி இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம்,

”இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தகத்தை உள்ளூர் கரன்சி மூலமாகவே நடத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது 85 பில்லியன் டாலராக உள்ளது. இது 100 பில்லியன் டாலரை தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.