விளம்பர வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் மோடி அரசு
**** மோடி அரசு ‘விளம்பர வெளிச்சத்தில்’ தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த செய்தி!
ஆனால், ‘பெண் குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தி’ற்கான 496 கோடி ரூபாயில் 79 சதவீதம் அதன் விளம்பரத்துக்கே செலவு செய்யப் பட்டது என்பது கொடுமையான செய்தி!
சே… பாவப்பட்ட ஏழைப் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் கூட இப்படி விளம்பரம் தேடிக் கொண்டு அந்தக் குழந்தைகள் வாழ்வை அழிக்கும் இந்த மோடி அரசு எவ்வளவு கேவலமானது என்பதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்!
ஆனால், ஒன்றிய அரசுக்கு இது உறைக்குமா?
*** ” இந்த மனிதர் எல்லாம் எப்படி ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியாக, அதுவும் பாரபட்சம் இன்றி”செயல்பட்டிருப்பபார் என்று மக்கள் சந்தேகப்படும் அளவுக்கு தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணா மலையின் நடவடிக்கைகள் இருக்கின்றன!
அவர் வகித்த, வகித்து வரும் பதவிகளுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லாத வகையில் நேற்றைய தினம் அண்ணாமலை ஒரு சர்ச்சையான நேர்காணல் தந்துள்ளார்!
அதில், தமிழக டி. ஜி. பி. பற்றி தரக் குறைவாக விமர்சித்துள்ளார்! மாரிதாஸ், கல்யாணராமன் போன்றவர்கள் தமிழக முதல்வர், மற்றும் விபத்தில் அகால மரணம் அடைந்த ராணுவத் தளபதி பிபின் ராவத் மறைவ ஆகியவை பற்றி மிகவும் சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்!
ஆனால், அண்ணாமலையோ,” 17 மாநிலங்களில் எங்கள் ஆட்சி நடக்கிறது.. ஜாக்கிரதை” என்று எச்சரித்திருக்கிறார்!
ஒரு மாநிலப் போலீஸ் தலைவரைக் கேவலம் படுத்துவதும், தங்கள் ஆளுங்கட்சி அதிகாரத்தில் எல்லோரையும் மிரட்டுவதும் இருக்கட்டும்…
தமிழகத்தில் இன்னும் ‘ ஒத்த ஓட்டு பா. ஜ. க.’ வாக இருப்பதை அண்ணாமலைைக்கு மக்கள் நினைவு படுத்துகிறார்கள்!
*** ஓவியர இரா.பாரி.