‘தைரியம் மற்றும் துணிச்சல் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளது,’ என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் கையெழுத்தானது. இந்த போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹுவா, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் கேள்விக்குள்ளாக்கினார்.
மேலும், ‘ஈரான் உலகிற்கு தைரியத்தையும் துணிச்சலையும் காட்டியுள்ளது. அதேபோல், நமது நாட்டின் தலைமை அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்,’ என்று கூறினார்.
‘இந்தியா தனது சொந்த போர் நிறுத்தம், தனது சொந்த வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தனது சொந்த எரிசக்தி கொள்கையை அறிவிக்க வேண்டும்,’ என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக 50 முறைக்கு மேல் கூறியிருந்தார். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் சர்ச்சையில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டையும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
டொனால்ட் டிரம்ப் விரும்பியபடி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது என்றும், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.
[youtube-feed feed=1]