நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் Thirugnanam Mylapore Perumal முகநூல் பதிவு

பெண் போலீசாரின்
சொல்லொணாத்
துயரம் :
எனது கனவு
நனவானது !

விஐபிகளுக்கு
பாதுகாப்பு அளிக்கும்
பணியில் ஈடுபடும்
பெண் காவலர்கள்
பல நேரம்
6 மணி நேரத்திற்கு மேல்,
வெயிலிலும்
மழையிலும் கால்கடுக்க
நிற்க நேரிடுகிறது !

அவர்கள்
சிறுநீர் கழிக்கக்கூட
அருகில் ஏற்பாடு
இல்லை.
இந்த அவலம் பற்றி,
நான் இங்கே
குறிப்பிட்டு,
‘நடமாடும் கழிவறை
அமைத்தால் என்ன ?’
என்று கேட்டிருந்தேன் !



‘இந்து தமிழ் திசை’
இன்று ஒரு
இனிப்பான செய்தி
சொல்கிறது…
“பாதுகாப்பு பணியில்
ஈடுபடும் பெண்
போலீசுக்கு
ரூ. 2 கோடியில்
15 நடமாடும் கழிவறை
வாகனங்களை
சென்னை
மாநகராட்சி
வாங்குகிறது” என்று !

எனது கனவு,
நனவானதில்
மகிழ்ச்சி !

எல்லா மாவட்ட
தலைநகர்களிலும்
இதை விரிவு செய்தால்,
கூடுதல் மகிழ்ச்சி !