சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கழக நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தி வரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு திமுக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடுகிறார்.

நேற்று மாலை புதுச்சேரி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். புதுச்சேரி எல்லை கோரிமேடு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரியில் களஆய்வு தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் உள்ள  ஆனந்தா இன் ஓட்டலில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

 

இன்று காலை அக்கார்டு ஓட்டலை விட்டு வெளியேறிய ஸ்டாலின்  எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள ஆனந்தா இன் ஓட்டலுக்கு சென்றார்.  அங்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்.

காலை 8 மணி முதல் 10 மணி வரை வடக்கு மாநில நிர்வாகிகளுடனும், காலை 10 மணி முதல் 11 மணி வரை தெற்கு மாநில நிர்வாகிகளுடனும் கள ஆய்வை நடத்துகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். தொடர்ந்து மதியம் காரைக்கால் நிர்வாகிகளுடன் கள ஆய்வை நடத்துகிறார்.

மாலை 4 மணிக்கு கள ஆய்வை முடித்து விட்டு அங்கிருந்து புறப்படும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாகப்பட்டினம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.