வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை ) மதியம் 2 மணியளவில் ப்ரிக்ஸ் புறப்பட்டது. அங்கு நடக்கும்  மாநாட்டில் பங்கேற்க அவ்விமானத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

மாலையில் விமானம் மொரிஷியஸ் வானெல்லையை அடைந்தது. அதன்பின், 4.44 மணி முதல் 4.58 மணி வரை 14 நிமிடங்களுக்கு தரை கட்டுப்பாட்டுடன் அந்த விமானத்திற்கு எவ்வித தொடர்பும் கிடைக்கவில்லை.

இதனால் இந்திய மொரீஷிய விமான ஊழியர்கள் பதட்டமடைந்தனர். அனைத்து விமான நிலையங்கள், விமானப்படை தொடர்பு மையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

ஆனால் நல்வாய்ப்பாக 14 நிமிடங்களுக்குப் பிறகு  மொரிஷியஸ் நாட்டு கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்தின் தொடர்பு கிடைத்தது.

அசாதாரண சூழல் நிலவுவதாக கருதி மொரிஷியசில் தரையிறங்க உள்ளதாக பைலட் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தெரிவித்தார். உடனடியாக விமானம் தரை இறங்க அனுமதிக்கப்பட்டது.

சற்று நேரத்தில் வானிலை சரியான பின் அவ்விமானம் பயணம் தொடர்ந்தது.