டெல்லி: நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த பொதுமுடக்கம் அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட 6ம் கட்ட பொதுமுடக்க தளர்வு விதி முறைகள் தொடரும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடையில்லை என்றும் வேறு மாநிலங்கள் செல்ல இ பாஸ் பெற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ளது. ஆனால், நவம்பர் 30 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.