மெக்சிகோ: மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் இதில் இருந்து மீளுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.