காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் Article 35A-வை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தொடக்கம் முதல் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில், அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் வழியில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகளை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆயுத கிடங்கில் தயாரிக்கப்பட்டது என்பதால், பனிலிங்க தரிசனத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக கூறி அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில், தற்போது காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதளமைச்சர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]