சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நடிகையாக வலம் வரும் நிஹாரிகாவுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 5 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.
அவ்வப்போது நிஹாரிகாவுக்குத் திருமணம் என்று வதந்திகள் பரவும். அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸுடன் திருமணம் எனத் தகவல் பரவியது. அதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மறுப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 18) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை அணைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நிஹாரிகா. இந்தப் புகைப்படத்தின் மூலம் தனக்குத் திருமணம் முடிவாகியிருப்பதை உறுதி செய்துள்ளார் நிஹாரிகா.
https://www.instagram.com/p/CBk0XTOpEW5/
2021-ம் ஆண்டு பிப்ரவரியில்தான் திருமணம் என செய்திகள் தெரிவிக்கின்றன .பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைதான் என்றும் திரையுலகைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தகவல் வெளியாகியுள்ளது.