விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி,  பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு பவுர்ணமி,  அமாவாசை மற்றும் பிரதோசம்  நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்டிகளில் மட்டும், பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.  மாதத்திற்கு  8 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இதிலும் மழைக்காலத்தில் அங்குள்ள ஓடைகளில் தண்ணீர் சென்றாலோ, கனமழை பெய்தாலோ, பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும்.

இந்த நிலையில்,  நாளை (டிச. 21) மார்கழி பிரதோஷம் மற்றும்  டிச. 23ம் தேதி அமாவாசையையொட்டி, நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவத்து உள்ளது. மேலும், மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.