கிட்டத்தட்ட 50 வருடங்களாக காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் சினிமா துறையை சுழற்றி அடித்தவர் மனோரமா .
மனோரமாவுக்கு பூபதி என்ற ஒரு மகன் உள்ளார். பூபதி சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார். இவர் போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. அதனால் மது இல்லாமல் தவித்த அவர், இரவில் தூங்குவதற்காக உபயோகிக்கும் தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டுள்ளார் .
இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதை தொடர்ந்து பூபதியை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.