ம்பால்

மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூரில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் மணிப்பூரில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வந்தது. இங்கு மேலும், பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிறகு நிலைமை மேம்பட்டு வந்ததை அடுத்து, மணிப்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. பிஷ்னுபூர், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.  பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தொய்ஜாம் சந்திரமணி என்ற இளைஞர் வெளியே வந்து வேடிக்கை பார்த்துள்ளார்.  அவர் மீது பின்னால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், முதுகை துளைத்துக்கொண்டு குண்டு வெளியே வந்துள்ளது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் தொய்ஜாம் சந்திரமணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையிஒட்ட் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் இருவர் ப்டு காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டுக் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]