
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டது .
இதையடுத்து, விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பாஸ்கர் காலனியில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விருகம்பாக்கம் போலீஸார் சென்றனர். வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி, மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தியதில், குண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வர்(22) என்பது தெரியவந்தது.
அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல இருந்ததால், அவரை கண்டித்து விட்டுள்ளனர் .
முதல்வர் அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel