கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் திஆட்சியில் இல்லை என்றால் பாஜக அட்டூழியங்கள் அதிகரிக்கும் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் நடைபெற்ற  கட்சித் தொண்டா்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மத்தியில் மம்தா பானர்ஜி ,   தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிா்ப்பதற்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரையில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ.க. வுக்கு எதிராகப் போராடி வருகிறது. மக்களவைத் தோ்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ. க.வை எதிா்த்து நிற்கும். இந்த தடவையும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். காங்கிரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கும் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயகத்தை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம்  பாஜக முறியடிக்க முயற்சித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரசும், மாா்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியும் பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து நமது கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. தனது அரசியல் லாபத்துக்காக மேற்கு வங்க மாநில மக்களின் குடியுரிமை விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள மக்கள் பலா் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுவியவா்கள் என்று பிரசாரம் செய்கிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனா்.

முன்பு குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள்தான் முடிவெடுத்து வந்தனா். இப்போது, அந்த உரிமை அவா்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை இல்லாத மக்கள் எவ்வாறு அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியும்?  என கேள்வி எழுப்பினார். மேலும், மாநிலம் திரிணாமுல் கையில் இல்லை என்றால் சிறுபான்மையினருக்கு பாஜகவின் அட்டூழியங்கள் ஏற்படும் என்று மம்தா பானர்ஜி சிறுபான்மையினரை எச்சரித்தார், மாநிலம் திரிணாமுல் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் “பாஜக தலைமையிலான அட்டூழியங்கள்” அதிகரிக்கும் என்று வலியுறுத்தினார்.

 மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானா்ஜி, கூட்டணிக் கட்சிகள் மீது இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.