மலேசியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரருக்கு பிரபல தொழிலதிபருமான ஆனந்த கிருஷ்ணன் காலமானார், அவருக்கு வயது 86.
தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள் என பல்வேறு துறைகளில் ஆனந்த் கிருஷ்ணா முதலீடு செய்துள்ளார். அவரது நிகர மதிப்பு தோராயமாக ரூ. 45,339 கோடி.
மலேசியாவில் பிரபலமான பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற போதும் இவரது ஒரே மகன் அஜான் சிரிபான்யோ இந்த சொத்துக்கள் அனைத்தையும் துறந்து பௌத்த மத துறவியாக வாழ்ந்து வருகிறார்.
தாய்லாந்து அரச குடும்ப வழித்தோன்றலான தனது தாய் மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபனின் உறவுகளைத் தேடி தாய்லாந்து சென்ற அஜான் சிரிபான்யோ புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு தனது தந்தையின் இத்தனை பெரிய தொழில் சாம்ராஜயத்தை துறந்து துறவியானார்.
சமீபத்தில் இவர் தாய்லாந்து காடுகளில் சுற்றித்திரிந்த செய்தி வெளியானது.
இந்த நிலையில் 86 வயதான இவரது தந்தையும் ஏர்செல் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனருமான ஆனந்த கிருஷ்ணன் இன்று மரணமடைந்தார்.