மும்பை: மும்பையில் திடீரென மாபெரும்  மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால், தானே உள்பட பல பகுதிகள் மின் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  பல பாதைகளில் புறநகர் ரயில் சேவை முடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

மும்பையின் பெருமளவிலான மின்சேவைகளை அதானி, டாடா குழுமங்கள் வழங்கி வருகின்றன.  கல்வாவில் உள்ள டாடா பவர் மைய கட்டத்தில்  மின்கருவிகள் செயலிழந்ததால் மும்பையின் பல பகுதிகளில் மின்சேவை பாதிக்கப்பட்டு உள்ளன. பல  ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வணிக மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால்,  “விநியோகத்தை மீட்டெடுக்க இன்னும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஆகும்” என்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்து உள்ளது.

மத்திய ரயில்வேயில், சி.எஸ்.எம்.டி மற்றும் திவா இடையே ரயில்கள் ஓடவில்லை; மேற்கு ரயில்வேயில், சர்ச்ச்கேட் மற்றும் வசாய் இடையே ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும்,  அத்தியாவசிய புறநகர் ரயில்களில் வேலை செய்ய நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜுஹு, அந்தேரி, மீரா சாலை, நவி மும்பை, தானே மற்றும் பன்வெல் ஆகியவை பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.  மின்தடை காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். பலர் ரயிலில் இருந்து நடக்கத் தொடங்கினர். ரயில் நிலையங்களிலும் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

சாலையிலும் சிக்னல்கள் கரண்டு இல்லாமல் வேலை செய்யாததால், வாகன ஓட்டிகள், குறுக்கும் நெடுக்குமாக சென்று வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள  அதானி மின்சாரம், “ஒரு பெரிய மின் கட்ட செயலிழப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் சப்ளை பாதிக்கப்படுகிறது. கட்டம் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, அதானி பவர் சிஸ்டம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகத்தை விரைவாக மீட்டெடுக்க எங்கள் குழுக்கள் செயல்படுகின்றன. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். ” என தெரிவித்து உள்ளது.

இந்த மின்தடை காரணமாக மருத்துவமனைகளில், இதுவரை எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படவில்லை என்றாலும், அதிகாரிகள் உடனடியாக வென்டிலேட்டர் மற்றும் ஐசியுக்களுக்கு பேட்டரி-பேக் அப் செய்யத் தொடங்கினர். நான்கு மணி நேரம் காப்புப் பிரதி எடுப்பதை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. “எங்களிடம் 1,000 லிட்டர் டீசல் உபரி மற்றும் ஜெனரேட்டர் உள்ளது, அவை 12 மணி நேரம் நீடிக்கும். மின்சாரம் குறைக்கப்பட்ட நிமிடத்தில் ஜெனரேட்டரைத் தொடங்கினோம். தேவைப்பட்டால் கூடுதல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். எந்த நோயாளியும் சிரமத்திற்கு ஆளாகவில்லை, ”என்று பி.கே.சி ஜம்போ கோவிட் வசதியின் டீன் டாக்டர் ராஜேஷ் தேரே கூறினார்.

கால்வா மற்றும் பர்தாவில் உள்ள முக்கிய மின்மாற்றி பல தடங்கல்களை சந்தித்துள்ளதால்,  டாடா பவரில் இருந்து பெஸ்ட் சப்ளை எடுக்கிறது என்று மின்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா அதானிக்கு மின்சாரம் அளிக்கிறது,  அந்த மின்சாரம்,  நகர எல்லைக்கு வெளியே விநியோகிக்கப்படும என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.