ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் இயக்கிய ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ என்ற தொடரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டது.
இந்த காமெடி தொடர் இப்போது பலராலும் ரசிக்கப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தொடரில் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் கலிபோர்னியாவில் வாழும் 15 வயது சிறுமியாக நடித்திருக்கிறார் ஈழத்திலிருந்து கனடாவிற்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்து தனது பள்ளிப்படிப்பை கனடாவில் படித்த மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
இந்த தொடர் தற்போது மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகமெங்கிலும் பிரபலமாகி வருவதால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.