மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
உத்தவ் தாக்கரே முதல்-அமைச்சராக உள்ளார். சட்டப்பேரவை தலைவராக நானா படோல் இருந்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் அவர், சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நேற்று நியமனம் செய்துள்ளது.
ஆறு செயல் தலைவர்கள் மற்றும் 10 உதவி தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்த மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் தரோட் இருந்து வந்தார்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நானா படோல் “என் மீது தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ‘நம்பர்- ஒன்’ இடத்துக்கு கொண்டு வருவேன்” என தெரிவித்துள்ளார்.
– பா. பாரதி