சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான ஆழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 19ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. அன்று அதிகாலை முதலே கடலென திரண்ட பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கினாா்.
அழகரை காண அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தா்கள் மதுரையில் குவிந்திருந்தனா். மக்கள் கூட்டத்தில் மிதந்து சாலையில் கள்ளழகர் பவனி வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆம்புன்ஸ் ஒன்றும் மக்கள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் உஷார் அடைந்த விழா கமிட்டியினர் மற்றும் காவல்துறையினர், கள்ளழகரை சிறிது நேரம் ஒதுங்கச் செய்து, ஆம்புலன்சு செல்லும் வகையில் மக்களையும் ஒழுங்குபடுத்தினர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது.
இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரைக்கு போய் வைகை ஆற்றில் இறங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு தரிசனம் கொடுத்த கள்ளழகர், மண்டூகமாக தவம் செய்த முனிவருக்கு சாப விமோசனம் அளித்துவிட்டு 8 நாட் களுக்குப் பின்னர் அழகர் மலைக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லாக்கில் மீண்டும் மலைக்கு திரும்பினார்.