சென்னை
சென்னை வழக்கறிஞர் சங்கம் இளம் வழக்கறிஞர்களுக்கு புதன் கிழமை அன்று 100 இரு சக்கர வாகனங்கள் வழங்க உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞர்கள் என அழைக்கப்படும் இளம் வழக்கறிஞர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வசதிக் குறைவாக வாழ்வதால் பொதுப் போக்குவரத்தை நம்பி உள்ளனர்.
இதனால் இவர்களால் குறித்த நேரத்துக்கு பணிக்கு செல்ல முடிவதில்லை எனும் குறை உள்ளது. இதையொட்டி நீதிபதி கிருபாகரன் இளம் வழக்கறிஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் அளிக்கலாம் என யோசனை தெரிவித்தார்,
மேலும் மூத்த வழக்கறிஞர்களை இதற்காக நிதி உதவி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி நிதி திரட்டப்பட்டு வரும் புதன்கிழமை அன்று சென்னை வழக்கறிஞர் சங்கம் 100 இரு சக்கர வாகனங்களை இளம் வழக்கறிஞர்களுக்கு அளிக்க உள்ளது.