
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.
இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்
அதே வேளையில்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த தொடரில் நாயகனாக ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மதன் நடிக்கிறார்.
இவர்களுக்கு இன்று திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel