சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால்,  சென்னை, செங்கல்பட்டு சில மாவட்டங்களில் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையில் சென்னையில்  நேற்று இரவு  முதல் பெய்து வரும்  தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 2 நாட்களில் தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதலே  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் மழை பாதிப்பில் இருந்து தப்பித்துள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக வடசென்னை பகுதியில் போதுமான அரசு மற்றும் ஆட்டோ போக்குவரத்து வசதிகளும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மாதவரம், ரெட்ஹில்ஸ்,  பெரம்பூர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், ஆயிரம்விளக்கு, மாம்பலம், ஆலந்தூர், கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் என  என பல்வேறு பகுதிகளில், நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்கிறது.

இதற்கிடையில்,  வடகடலோர மாவட்டங்களில் இடி,ம்ன்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.. ஏற்கனவே, நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த  24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், . நகரின் ஒருசில பலதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால்,. 12.11.2024 முதல் 13.11.2024 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மண்னார் வளைடைா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்க 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.