இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் .

இந்நிலையில் ‘விஜய் 67’ வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.